Sunday, May 16, 2010

வருமான வரி குறித்து

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
Saturday , 15th May 2010 07:40:09 AM
நேரடி வரிவிதிப்பு முறையில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் உருவாக்கப்பட்ட நேரடி வரிவிதிப்பு முறையின்படி, ரூ.10 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதில் சில மாற்றங்களை செய்து, வருகிற ஜுன் மாதம் 15-ந்தேதிக்குள் நேரடி வரிவிதிப்பு முறைக்கான புதிய வரைவு நகல் இறுதி செய்யப்படுகிறது.

அதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, ரூ.10 லட்சம் வரை வருமானத்துக்கு 10 சதவீத வரி விதிப்புக்கு முதலில் உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த வரிவிதிப்புக்கான (10 சதவீதம்) வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக குறைக்கப்படுகிறது.

ரூ.5 முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விகிதம் 20 சதவீதமாகவும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமாகவும் இருக்கும். முதல் திட்டப்படி, ரூ.10 முதல் 25 லட்சம் வரை 20 சதவீத வரிவிதிப்புக்கு உத்தேசிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், முதல் திட்டப்படி, ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த வருமான வரிவிலக்கு உச்சவரம்பு இனி ரூ.2 லட்சமாக உயருகிறது.

வீட்டுக்கடன்களுக்கு வருமான வரிவிலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசின் முதல் திட்டத்தில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. இரண்டாவது புதிய திட்டத்திலும் வீட்டுக்கடன்களுக்கு வரிவிலக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் போன்ற சேமிப்புகளுக்கான வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருப்பதை ரூ.3 லட்சமாக உயர்த்த உத்தேசித்து இருப்பதால், இதன் மூலம் ஏற்படும் வரி வருவாய் இழப்பை சரிக்கட்டுவதற்காக வீட்டுக்கடன்களுக்கு வரிவிலக்கை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதமாகவும், ரூ.5 முதல் 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமாகவும், ரூ.8 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
பிற செய்திகள்

No comments:

Post a Comment