Thursday, December 2, 2010

BSNL STRIKE-Tuticorin-Dina malar

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 650 பிஎஸ்என்எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பிஎஸ்என்எல்., ஊழியர்களின் வேø லநிறுத்த போராட்டத்தினால் டெலிபோன் சேவை, செல் சேவை, ரயில்வே மற்றும் பாங்க் நெட்வொர்க்குகள் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல் இழந்தது. சாம் பிட்ரோடா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 30 சதவீத காட்டாய ஓய்வு திட்டம் கூடாது, பிஎஸ்என்எல்., வளர்ச்சிக்கு தேவையான மொபைல் கருவிகளை தாமதமின்றி வாங்கிட வேண்டும், ஐடிஎஸ்., அதிகாரிகளை பிஎஸ்என்எல்லில் இணைப்பது குறித்து உடனடியாக முடிவு எடுத்து இணைக்க வேண்டும், 3ஜி மற்றும் பி. டபிள்யூ.ஏ ஸ்பெக்ட்ரம் கட்டணமாக பிஎஸ்என்எல்., நிறுவனம் அரசுக்கு செலுத்திய 18,500 கோடி ரூபாயை திரும்ப தர வேண்டும், பிஎஸ்என்எல்., பங்கு விற்பனை கூடாது, பிஎஸ்என்எல்., காப்பர் கேபிள்களை தனியார் பயன்படுத்த அனுமதிக்ககூடாது, பிஎஸ்என்எல்., கார்ப்பரேசனாக மாறும் போது சங்கங்களுக்கு உறுதியளித்தப்படி லை சென்ஸ் கட்டணத்தில் விலக்கு அளித்திட வேண்டும், 1-1-2007க்கு முன்பு பணி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல்., ஓய்வூதியர்களுக்கு ஐடிஏ., பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்.,லில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று முதல் 3ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல்.,லில் பணியாற்றும் 140 அதிகாரிகள், 250 பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 650 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 67 டெலிபோன் எக்ஸ்சேஞ்கள், பொது மேலாளர் அலுவலகம், தந்தி ஆபிஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் போன்றவை வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் பல இடங்களில் பிஎஸ்என்எல்., கேபிள்களில் பழுது ஏற்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல்., ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் பல இடங்களில் பழுதாகியுள்ள டெலிபோன்களை சரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே நெட்வொர்க், பாங்க் நெட்வொர்க் போன்றவை அனைத்து பிஎஸ்என்எல் நிறுவனம் வழியாக செயல்பட்டு வருகிறது.  பிஎஸ்என்எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுவருகிறது.

No comments:

Post a Comment