Thursday, December 2, 2010
BSNL strike-Cuddalore news.
கடலூர் : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஒரு லட்சம் விருப்பம் ஓய்வு திட்டத்தை ரத்து செய்யவேண்டும். நிறுவனத்திற்கு சேர வேண்டிய 18 ஆயிரத்து 500 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும். மொபைல் போன் விரிவாக்க சேவைக்கு <உபகரணம் வாங்குவதற்கான தடை நீக்கவேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 164 பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் பணிபுரியும் 1,250 அதிகாரிகளில் 1,230 பேரும், 228 ஊழியர்களில், 223 ஊழியர்களும் நேற்று காலை 8 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இலவச சிம்கார்டு வழங்கும் பணி, மொபைல் போன் டவர்கள் பழுது நீக்கம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment