Wednesday, December 22, 2010

மாநிலச் செயற்குழுக் கூட்டம் 19-12-2010

நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 19-12-2010 அன்று கடலூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மற்றும் முன்னணி செயல்வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாநிலத் தலைவர் தோழர் M.அப்துல் வஹாப் தலைமையேற்க, மாநிலச் செயல்தலைவர் தோழர் K.R.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநில உதவிச் செயலர் தோழர் C.A.தாஸ் வரவேற்புரையாற்ற, அகில இந்திய உதவிப் பொதுச்செயலரும் மாநில இணைச்செயலருமான தோழர் P.ஆண்டியப்பன் செயற்குழுவைத் துவக்கிவைத்தார்.
          
FNTO பேரியக்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலர் தோழர் K.வள்ளிநாயகம் செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம், BSNL-ன் தற்போதைய நிலை, தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள், அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் கையாலாகாத்தனம், எதிர்வரும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் FNTO-வின் நிலைப்பாடு, கொல்கத்தா மத்தியச் சங்கச் செயற்குழுவின் மாற்றவொண்ணா முடிவுகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

            மாவட்டங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் மாவட்டச் செயலர்களும் மாநில நிர்வாகிகளும் விரிவாக விவாதித்தனர். மாநில மகளிர் அணித்தலைவி தோழியர் மீனாட்சி மற்றும் மாநில அமைப்புச் செயலர் தோழியர் சங்கரிதேவி ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக, விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய தமிழ் மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன் தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பது குறித்தும் FNTO –வுக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது குறித்தும் விளக்கவுரையாற்றினார்.

             மாநிலப் பொருளாளரும் கடலூர் மாவட்டச் செயலருமான தோழர் R.V.ஜெயராமன் தலைமையில் கடலூர் மாவட்டத் தோழர்கள், மாநிலச் செயற்குழுவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.

No comments:

Post a Comment