கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பி.எஸ். என்.எல்., அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர்கள் ஆறுமுகம், செல்லையா தலைமை தாங்கினர். கிளை செயலாளர்கள் பொன்மலை, மணி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். கிளை செயலாளர் ஜெயராமன் கண்டன உரையாற்றினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல்., உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல் படுத்த வேண்டும். ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட உதவி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
துச்சேரி : தொழிற்சங்கங்கள் வரும் 7ம் தேதி நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க பி.எஸ்.என்.எல்., ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலர் கொளஞ்சியப்பன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையைக் கைவிட வேண்டும். பி.எஸ்.என்.எல்.,யின் நிதி ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, எச்.எம்.எஸ், டி.யூ.சி.சி, யூ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ, ஏ.ஐ.யூ.டி.யூ.சி ஆகிய மத்திய தொழிற் சங்கங்கள் வரும் 7ம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம், தொலை தொடர்பு தேசிய சங்கம், பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம், ஓய்வு பெற்றோர் சங்கம் ஆகியவை கலந்து கொள்வது என முடிவு செய்யதுள்ளது. பி.எஸ்.என்.எல்., 3 ஜி சேவை மற்றும் பிராட்பேண்ட் இண்டர்நெட் கட்டணமாக பி.எஸ்.என்.எல்., இருப்பில் இருந்து 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிர்பந்தம் செய்து அரசு எடுத்துக் கொண்டது. மேலும், கடந்தாண்டுகளில் பி.எஸ்.என்.எல்.,லில் கனிசமான லாபம் கிடைத்தது.
ஆனால் இந்தாண்டு 1822 கோடி ரூபாய் நஷ்டம் என அறிவிப்பு வந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல்., ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிர்வாகிகள் தங்கமணி, வீரபத்திரன், சம்பத் உடனிருந்தனர்.
கோவில்பட்டி:கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.செல்போன் பயன்படுத்துவோர் 3ஜி எனப்படும் நவீன சேவையை பயன்படுத்த கேட்டு காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில் 3ஜிக்கான டேட்டா கார்டு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இம்மாத கடைசி வாரத்தில் தனியார் நிறுவனங்கள் இச்சேவையை பொதுமக்களுக்கு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவாக செயல்படுவதாக கருதி தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதனடிப்படையில் கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல்-இயு கோவில்பட்டி தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். உபதலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். செயலாளர் சுப்பையா பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment