BSNL நிறுவன நாள் 01 - 10 - 2010
வருகிற அக்டோபர் 1 ம் தேதி அன்று BSNL நிறுவன தினத்தை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. கடந்த 17 - 09 - 10 அன்று நமது பொது மேலாளர் அவர்கள் OPINION LEADER கூட்டத்தை கூட்டி, தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்.
1. ஊழியர்கள், அதிகாரிகள் ரத்த தானம் அளிப்பது.
2. குடியிருப்பைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவது.
3.1000 ஆண்டுகளாக கம்பீரமாகநிலைத்து நிற்கும்
நமது தஞ்சை பெரிய கோவிலின்பெருந்திருவிழா
வருகிற 22 முதல் 26 ஆம் தேதிவரை சிறப்பாக
நடைபெறுவதை ஒட்டி நுழைவுப் பகுதிகளில்
நமது BSNL நிறுவனத்தின் பத்து ஆண்டுகள்
நிறைவை வெளிப்படுத்தும் விதமாய் துறையின்
சார்பில் வரவேற்பு வாசகம் எழுதி வைப்பது.
4. அன்றைய தினம் வாடிக்கையாளர் சேவை
மையத்திற்கு வருகை தரும் ஊழியர்கள் மற்றும்
வாடிக்கையாளர்களுக்கு KEY CHAIN வழங்குவது.
6. அனைத்து ஊழியர்களின் வாகனங்களில் ஓட்ட ஸ்டிக்கர் வழங்குதல்.
5. இறுதியாக மேரீஸ் கார்னர் தொலைபேசியகம்
துவங்கி திலகர் திடல் வரை ஊழியர்கள்
அனைவரும் பேரணியாகச் செல்வது என்றும்
முடிவு செய்யப்பட்டது.
தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவரும் தவறாது ஈடுபாட்டோடு பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாருங்களேன்! எவ்வளவு கவனமாக திட்டமிடுகிறார்கள்! அன்று இரவு பகலாக வேலை பார்த்து இருக்கின்ற பழுதுகளை எல்லாம் நீக்குவோம் என்று உறுதி எடுத்திருந்தால் அது வித்தியாசம். மரக்கன்றுகள் நடுவது, ரத்த தானம் செய்வது எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டும்தானே உதவப் போகிறது?
ReplyDelete