Saturday, April 3, 2010

உலகின் 5வது பெரிய டெலிகாம் நிறுவனம் பார்தி ஏர்டெல்

உலகின் 5வது பெரிய டெலிகாம் நிறுவனம் பார்தி ஏர்டெல்
Wednesday , 31st March 2010 03:39:21 PM
image
ஜெய்ன் டெலிகாமின் ஆப்ரிக்கப் பிரிவு முழுவதையும் 10.7 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டது ஏர்டெல். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மாலை ஆம்ஸ்டர்டாமில் வைத்து அறிவித்தார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்.

இந்த டீல் மூலம் உலகில் ஐந்து பெரிய மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது பார்தி ஏர்டெல்.

டாடாவுக்குப் பிறகு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம் ஏர்டெல்தான். அதே நேரம், உலகில் 18 நாடுகளில் பரந்து விரிந்த ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை ஏர்டெல் மட்டுமே பெறுகிறது.

"இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மூலம், உலகின் அனைத்துக் கண்டங்களிலும் ஒரு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் உள்ளது என்ற முத்திரை பதிக்கப்படுகிறது. ஒரு இந்தியனாக இது எனக்குப் பெருமையாக உள்ளது... ஜெய்ன் டெலிகாம் ஆப்ரிக்காவில் ஏற்படுத்தியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. அவர்கள் போட்டுக் கொடுத்துள்ள ரூட்டில் இது நல்ல பயணமாக உள்ளது" என்கிறார் பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மித்தல்.

எண்பதுகளில் பஞ்சாபின் லூதியானா நகரில் சைக்கிள் உபரி பாகங்கள் விற்பனையாளராக வாழ்க்கையைத் துவங்கியவர் சுனில் மிட்டல். இன்று உலகின் முதல்நிலை தொலைபேசி சேவை நிறுவனத்துக்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் 180 கோடி மக்கள் தொகை கொண்ட 21 நாடுகளில் ஏர்டெல் கால்பரப்பியுள்ள பெரும் நிறுவனமாக மாறியுள்ளது ஏர்டெல். ஜெய்ன் டெலிகாமால் மட்டுமே 42 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது ஏர்டெல்.

"இது ஒரு ஆரம்பம்தான். அப்படித்தான் எனக்குப் படுகிறது. வருகின்ற நாட்களில் இன்னும் சில பெரிய நிகழ்வுகளைப் பார்க்கப் போகிறீர்கள்..." என்கிறார் சுனில் மிட்டல்.

No comments:

Post a Comment