புதுடில்லி:வரும் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 8.5 சதவீதமாக நிர்ணயிக்க, மத்திய நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி (எப்.ஐ.சி.,) பரிந்துரை செய்துள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:வரும் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீத நிர்ணயம் குறித்து, மத்திய நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி (எப்.ஐ.சி.,) அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், வரும் நிதியாண்டுக்கான, வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 8.5 சதவீதமாக நிர்ணயிக்க, பரிந்துரை செய்தனர்.
இதன்படி, கடந்த ஐந்தாண்டுகளாக அளிக்கப் பட்டு வரும் 8.5 சதவீதம் என்ற வட்டி வீதமே, வரும் நிதியாண்டிலும் தொடர வாய்ப்புள்ளது.நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியின் பரிந்துரையை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் கீழ் செயல்படும், மத்திய அறக்கட்டளை கமிட்டி ஆய்வு செய்து, பின்னர் அதற்கு ஒப்புதல் அளிக்கும்.இவ்வாறு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நிலையில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.---Dina malar 01 03 2010
No comments:
Post a Comment