கடலூர்: பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் - ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் தர்ணா நடந்தது.
ஒரு லட்சம் ஊழியர் களை குறைக்கும் திட் டத்தை உடனே நிறுத்த வேண்டும். அவுட் சோர் சிங் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலகம் முன் தர்ணா நடந்தது. இதில் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் சம்பந்தம், சுந்தரமூர்த்தி, ஜெயராமன், பாண்டுரங்கன், வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை
3.பி.எஸ்.என்.எல்., பணிகள் பாதிப்பு : அதிகாரிகள், ஊழியர்கள் தர்ணா
மதுரை : மதுரை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தால், நேற்று பணிகள் பாதிக்கப்பட்டன. பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த தர்ணாவிற்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேலுச் சாமி தலைமை வகித்தார்.
கூட்டமைப்பின் கன்வீனர் சூரியன் பேசியதாவது: பி.எல்.என்.எல்., வளர்ச்சியை உயர்த்துவதாக, பிரதமர் மன்மோகன்சிங் சாம்பிட்ரோடா தலைமையில் அமைத்த குழு, தனது பரிந்துரைகளை மார்ச் 5ல் வழங்கியது. அது பி.எல்.என்.எல்., நிறுவனத்தை சீரழிப்பதற்கான பரிந்துரையாகவே உள்ளது. குறிப்பாக பி.எஸ்.என்.எல்., பங்குகளை முப்பது சதவீதம் விற்பது, ஒரு லட்சம் ஊழியர்களை வி.ஆர்.எஸ்., மூலம் அனுப்புவது போன்ற பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இதனை மத்திய அரசு ஏற்ககூடாது. இதனை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்களும் பங்கேற்கும் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஏப்., 20ல் நடைபெறும், என்றார்.
என்.எப்.டி.இ., மாநில அமைப்பு செயலாளர் லட்சம், பி.எஸ்.என்.எல்.இ.யு., மாநில அமைப்பு செயலாளர் செல்வின் சத்தியராஜ், டபிள்யு.ஆர்.யு., மாநில செயலர் பாஸ்கரன் உட்பட பல தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் 2600 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 700 க்கும் மேற்பட்டோர், தர்ணா போராட்டத்தில் பங்கேற்றதால், அனைத்து பி.எல்.என்.எல்., அலுவலக பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டன.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை:தி.மலையில் பின்.எஸ். என்.எல். அதிகாரிகள் மற் றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். விருப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ஊழியர்களை வெளியேற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது. 9 கோடி செல்போன் இணைப்புகளுக்காக புதிய கருவிகளை வாங்கும் டெண்டரை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மலையில் துணை பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிஎஸ்என்எல்., அதிகாரிகள் ஊழியர்கள் நெல்லையில் தர்ணா திருநெல்வேலி
திருநெல்வேலி : நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல்., 30 சதவீத பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பிஎஸ்என்எல்., காப்பர் கேபிளை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் என்ற முறையில் பிஎஸ்என்எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஐ.டி.எஸ்., அதிகாரிகளை பிஎஸ்என்எல்., நிரந்த அதிகாரிகளாக மாற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்., அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல்., பொதுமேலாளர் அலுவலகம் முன் நடந்த தர்ணா போராட்டத்திற்கு எஸ்என்இஏ., மாவட்ட தலைவர் சிவாஜி, பிஎஸ்என்எல்., ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபாலன், அகில இந்திய பிஎஸ்என்எல்., ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈகையா, என்எப்டிஇ., ராஜ்குமார் தலைமை வகித்தனர். தர்ணாவில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஸ்ரீதர், மரிய அந்தோணி, ராமகிருஷ்ணன், கார்த்திகேயன், பெருமாள்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா போராட்டம்
சேலம்:
சேலம்: பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. சேலம் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீரங்கபாளையம் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது. கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நூருல்லா தலைமை வகித்தார். கன்வீனர் கோபால் முன்னிலை வகித்தார்.
சாம் பிட்ரோடா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பிற்போக்கான மக்கள் மற்றும் ஊழியர் விரோத பரிந்துரைகள் அமல்படுத்த கூடாது. 30 சதவீத பி.எஸ்.என்.எல்., பங்குகளை விற்பனை செய்யக்கூடாது. காப்பர் கேபிள்களை தனியார் வசம் விடக்கூடாது. பி.எஸ்.என்.எல்., வேலைகளை தனியாருக்கு ஒப்படைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டம்
தஞ்சாவூர் : தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 30 சதவீத பங்கு விற்பனையை கைவிடக்கோரியும், ஒரு லட்சம் ஊழியர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் வீட்டுக்கு அனுப்பக்கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு சங்க நிர்வாகிகள் நடராஜா, சிவசிதம்பரம், சவுந்தர்ராஜன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மனோகரன் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
வேலூர்:வேலூர் டெலிபோன் பவன் முன்பு மாவட்ட பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடந்தது. மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் தசரதன் தொடங்கி வைத்தார்.நிர்வாகத்தை பன்னாட் டுக்கு தாரை வார்க்கும் 'சாம் பிட் ரோடா' கமிட்டி பரிந்துரையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.மாலையில் மாவட்ட தலைவர் ராஜாராம், போராட்டத்தை முடித்து வைத்தார்.
BSNL staff stage dharna at various places Coimbatore The Hindu
Staff Reporter Coimbatore: The Joint Forum of BSNL Unions and Associations staged dharna at various places in Coimbatore, Pollachi and Tirupur on Friday urging the government to take steps for stopping the declining profit graph.
The associations said that since 2006, the profit margins had been consistently coming down and the committee led by Sam Pitroda, formed by the Prime Minister, had given some recommendations. Some of the recommendations were not employee-friendly and objective-oriented.
The forum sought procurement of equipment without delay, increasing cellular service, waiving of charges due from BSNL, insulating BSNL from government interference and bringing ITS officers under the BSNL fold.
The forum has decided to go in for an indefinite strike from April 20.
BSNL staff protest Sam Pitroda panel report
Special Correspondent. HYDERABAD: Members of the Joint Action Committee of BSNL non-executive and executive unions and associations staged a day-long dharna here on Friday to protest against the report of the committee headed by Sam Pitroda recommending disinvestment and outsourcing.
JAC chairman Rajamouli and convenor Sampath Kumar, while addressing the gathering, said the Committee's report would lead to removal of one lakh out of the three lakh BSNL employees either by retrenchment or by enforcing VRS.
They demanded purchase of GSM (Global Standards for Mobile Communication) equipment to handle 9 crore additional connections and absorption of Indian Telecom Service officers into the BSNL as permanent employees. P. Ashok Babu, assistant general secretary of the BSNL Employees Association alleged that tax rebates to the tune of Rs. 60,000 crore were given to big investors and private operators in 2008-09 and Rs. 30,000 crore in the current fiscal. The JAC includes BSNL Employees Union, National Federation of Telecom Employees, All-India BSNL Employees Union, All-India BSNL Executives Association and Sanchar Nigam Employees Union.
No comments:
Post a Comment