மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தங்களது எண்களை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் மொபைல் போன் போர்டபிலிட்டி (எம்.என்.பி.,) வசதிகளை வழங்குவதில், சில நிறுவனங்கள் முரண்டு பிடிப்பதால், வாடிக்கையாளர்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Some operators are not allowing MNP.So subscribers find lot of difficulties.
கடந்த ஜனவரி முதல், இந்தியா முழுவதற்கும் மொபைல் போன் போர்டபிலிட்டி திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதையடுத்து, ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் எண்களை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றிக் கொண்டனர்; மாற்றி வருகின்றனர்.இதில், ஐடியா, ஏர்செல், பி.எஸ்.என்.எல்., டாடா போன்ற நிறுவனங்கள் மட்டுமே, எம்.என்.பி., கோரியுள்ள வாடிக்கையாளர்களிடம், மாறியுள்ள காரணத்தை மட்டும் கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கின்றனர். பெரும்பாலும் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால், ஏர்டெல்லை பொறுத்தவரை, ஏதோ காரணங்களை கூறி, அது பிரிபெய்டாக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்களுக்கு அனுமதி தருவதில்லை என புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக கோடு எண்ணை பெற்ற வாடிக்கையாளர்கள், மீண்டும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டாலும், சரியான விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
Operators like Idea,BSNL,Aircel allows subscribers for change of MNP. But complaints are there from Chennai Airtel.
ஏர்டெல், சென்னையை பொறுத்தவரை இப்பிரச்னை இல்லை என்றாலும், ஏர்டெல், தமிழக சிம்களுக்கு அதற்குரிய அனுமதியை வழங்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறது என, பரவலாக புகார் கூறப்படுகிறது. எம்.என்.பி., திட்டத்தில், புதிய வாடிக்கையாளர்களை வரவேற்க காத்திருக்கும் மொபைல் போன் நிறுவனங்கள், தங்களிடமிருந்து செல்லும் வாடிக்கையாளர்களையும் அதேபோல் அன்புடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்பதே மொபைல்போன் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.
பி.எஸ்.என்.எல்., பாரபட்சம்: பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு மொபைலை பொறுத்தவரை, சென்னை பி.எஸ்.என்.எல்.,லில் உள்ள பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக, சென்னையில் வசிக்கும், தமிழக வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கிடைப்பதில்லை. உதாரணமாக, 65 ரூபாய் ரேட் கட்டரை தமிழக வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. எனவே, எம்.என்.பி., திட்டத்தில், தமிழக வாடிக்கையாளர்களையும், சென்னை வாடிக்கையாளர்களாக மாற்றம் செய்யும் வகையில் திட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.
BSNL Tamil Nadu is not implementing many plans which are available in Chennai BSNL. So some subscribers of Tamil Nadu living in Chennai are facing problems. For example Rs.65 rate cutter in Chennai cannot be used in Tamil Nadu BSNL.
Our suggestion: For Chennai and Tamil Nadu MNP is one and same. So all plans available must be common for Tamil Nadu and Chennai.
டாப்-அப் 55 :பல தனியார் மொபைல் நிறுவனங்களில், குறைந்தபட்ச டாப்-அப் கட்டணம் 10 ரூபாயில் இருந்து துவங்குகிறது. அதுவே, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் 55 ரூபாய் டாப்-அப் செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் மட்டுமே இக்குறைந்தபட்ச டாப்-அப் வசதிகள், ஈ-சார்ஜ் மூலம் செய்யப்படுகின்றன. மற்ற இடங்களில், 55 ரூபாய்க்கு குறைவாக டாப்-அப் செய்யப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் தான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், பி.எஸ்.என்.எல்., 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
E recharge is not available for minimum of Rs. 10/- But recharge coupon is available for Rs. 10/-
டவர் பெயர் வெளியிட மறுப்பு : ஏர்டெல், ஏர்செல் மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள் மட்டுமே, செல் இன்போவில், குறிப்பிட்ட பகுதியின் டவர் பெயரை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கின்றன. மற்ற நிறுவனங்கள், அந்த இடத்தில், தங்களது சுயபுராணங்களை பாடி வருகின்றன.இதுபோன்ற காரணங்களால், சிக்னலில் சிக்கல் ஏற்படும் போது, வாடிக்கையாளர்கள், தாங்கள் எந்த இடத்திலிருந்து பேசுகின்றனர் என, வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு துல்லியமாக சொல்ல முடியாமல் போவதுடன், சென்னை போன்ற புதிய இடங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தாங்கள் எந்த இடத்தில் இருக்கின்றனர் என்ற விவரங்களை தெரிந்து கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. மொபைல்போன் நிறுவனங்கள் கவனிக்குமா?
No comments:
Post a Comment