Friday, November 5, 2010

போனஸ் இல்லை … No Bonus … बोनस नहि …-தேசிய முரசு

போனஸ் இல்லை … No Bonus … बोनस नहि
போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ஆகும். 33 வருடங்களாகக் கொடுக்கப்பட்டு வந்த போனஸ் இந்த வருடம், இன்றுவரை, இல்லையென்றாகிவிட்டது. ஊதியம் கொடுக்கவே முடியாதபோது, கொடுபடா ஊதியமான போனஸ் எப்படி கொடுக்க முடியுமென்ற செய்தியை சில சங்கங்கள் பரப்பி, அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஊழியர்களைத் தயார்செய்ய முயற்சித்தன. இலாபம் இல்லையென்றாலும்கூட, போனஸ் சட்டத்தின்படி குறைந்தபட்ச போனஸாவது கொடுக்கப்பட வேண்டுமென்ற விதிகளைச் சுட்டிக்காட்டி நிர்வாகத்திடம் விவாதித்த FNTO, தொலைத்தொடர்பு அமைச்சரையும் சந்தித்து போனஸ் கோரிக்கையை வலியுறுத்தியது. குறைந்தபட்ச போனஸாக தொழிலாளர்களுக்கு 3500 ரூபாயும் அதிகாரிகளுக்கு 5000 ரூபாயும் கொடுக்கலாமென்ற பரிந்துரையை நிர்வாகம் தயாரித்துள்ளதாக செய்தி வெளியானபோது, சில சங்க()ங்கள் குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பியதால், ”உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணாஎன்பதுபோல் ஆகிவிட்டது. (வேண்டுமென்றே) காலம் தாழ்ந்த கூட்டுப் போராட்டங்களாலும் கதையாகாததால், கடைசியாக நமது தலைவர்கள் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து போனஸ், 78.2% IDA fixation கோரிக்கைகளின் பாலுள்ள நியாயத்தை வலியுறுத்தியுள்ளனர். அவரும் கவனிப்பதாக உறுதியளித்துள்ளார்.
கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறுமென நம்புவோம் !

தீபம்” + திருநாள் = வாழ்த்துக்கள்

போனஸ் இல்லாததால் BSNL தொழிலாளர்களுக்கு இந்த வருட தீபாவளிதான் இருண்ட தீபாவளி ஆகிவிட்டது. அடுத்த வருடமாவது BSNL தொழிலாளர்களின் மனங்களிலும் இல்லங்களிலும் இருள் விலகட்டும். ஒளி பிறக்கட்டும். அடுத்த தீபாவளியானது உண்மையானதீபஆவளியாக மலரட்டும் !

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment