Friday, November 12, 2010

ஹலோ ! உங்களுக்குத் தெரியுமா இந்தச் சேதி-தேசிய முரசு

ஹலோ ! உங்களுக்குத் தெரியுமா இந்தச் சேதி ?

BSNL செல்போன் சேவையில் ஒரு சிறப்பம்சம். அன்னதானம், இரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் என்ற சிறந்த தானங்களின் வரிசையில் – இப்போது இலகுவான ரீசார்ஜ் தானம் (Recharge topup Gift). BSNL prepaid  கஸ்டமர் ஒருவர், தனது செல்போனில் பாக்கியுள்ள ரீசார்ஜ் தொகையில் 200 ரூபாய் தவிர்த்து மீதியை வேறொரு BSNL prepaid  கஸ்டமருக்கு SMS மூலமாக தானம் (Gift) பண்ணலாம். அதே மாநிலத்திற்குள், 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை, ஒரு நாளைக்கு ஒரு தடவை தானம் செய்யலாம். கட்டணம் 1 ரூ. மட்டுமே.
GIFT என்று டைப் செய்து இடைவெளி விட்டு எந்த செல்போனுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு எவ்வளவு ரூபாய் என்பதையும் டைப் செய்து 53738 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
உதாரணம்: SMS to 53738 like… GIFT 9443112345 50
உடனே, குறிப்பிட்ட செல்போனுக்கு தானம் வழங்கப்பட்ட தொகை கணக்கிலேறியது குறித்த தகவல் SMS மூலம் அறியலாம்.
உடனே பேசவேண்டிய அவசரத்திலுள்ள, ஆனால் கணக்கில் பணம் (balance) இல்லாத எவருக்கும் இந்த ரீசார்ஜ் தானம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment