Thursday, November 11, 2010

2-ஜி -Dina Mani

புது தில்லி, நவ. 10: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) வினோத் ராய் புதன்கிழமை வழங்கினார்.அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அறிக்கையை நாடாளுமன்றத்தில் எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என வினோத் ராய் கூறினார்.அறிக்கையில் இடம்பெற்றுள்ளவை குறித்து தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.1.76 லட்சம் கோடி இழப்பு? 2-ஜி அலைக்கற்றை 2008-ல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2001 விலை மதிப்பின் அடிப்படையில் 2008-ல் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஒரு சில நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை மத்திய அமைச்சர் ஆ.ராசா புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்றும், முறைகேடு நடந்ததை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது எனவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிறுவனங்களின் தகுதி நிர்ணயம் தொடர்பாக தனது வழிகாட்டி முறைகளையே தொலைத் தொடர்பு அமைச்சகம் பின்பற்றாதது, விண்ணப்பிக்கும் தேதியை தன்னிச்சையாக மாற்றியது, சில நிறுவனங்களுக்கு முறைகேடாக ஆதாயம் தரும்வகையில் செயல்பட்டது போன்றவையும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.தொலைத் தொடர்பு அமைச்சகம் மறுப்பு: சி.ஏ.ஜி.யின் அறிக்கை தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:1999-ம் ஆண்டு தொலைத் தொடர்பு கொள்கை, 2003 அமைச்சரவை முடிவு, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.இது தன்னிச்சையானது என்றோ, அரசுக்கு வருவாய் இழப்பு என்றோ மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூற முடியாது.இது தொடர்பான ஒட்டுமொத்த கொள்கையும் தொடர்புடைய அமைப்புகளால் மாற்றப்பட்டாலோ, திருத்தப்பட்டாலோதான் 
இது குறித்து சி.ஏ.ஜி. கேள்வி எழுப்ப முடியும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

"பிரதமர் நாடு திரும்பியதும் முடிவு'மத்திய அமைச்சர் ஆ.ராசா அமைச்சர் பதவியில் தொடர்வாரா என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் முடிவு செய்வார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளன.தென் கொரியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நாடு திரும்புகிறார்.அவர் நாடு திரும்பியதும் ஆ.ராசா விவகாரம் குறித்து முடிவு எடுப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

.ஆ.ராசாவை நீக்க வலியுறுத்த பாஜக முடிவுமத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீக்க வலியுறுத்துவது என பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானியின் இல்லத்தில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்யவும், காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு ஊழல் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துவது எனவும் இந்த சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கருத்துமத்திய அமைச்சர் ஆ.ராசா விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது பிரதமரின் தனிப்பட்ட உரிமையாகும். கூட்டணி தர்மத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment