Friday, February 26, 2010

Fatal Attraction?


Q: How and Why Executive Associations are attracted towards Sam Pitroda?

A: It is a fatal attraction. It is learnt that Pitroda has suggested scrapping of GSM mega tender for the implementation of which executive association and we have been pressing for. It is also understood that Pitroda Committee has recommended reduction in retirement age whereas the global trend is to extend it. People like Pitroda who believe in, “Business is not the business of the Govt.” cannot help a PSU to sustain or grow. We have to find a remedy within, not outside. After consulting the other unions on the contends of Sam Pitroda Committee Report FNTO would strive for scrapping it.


கே:- அதிகாரிகள் சங்கங்கள் திரு சாம் பிட்ரோடாவின் கருத்துக்களால் கவரப் பட்டது போல் தெரிகிறதே?
ப:- இது விளக்கில் விழுகின்ற விட்டில் பூச்சிகள் கதைதான். திரு பிட்ரோடா செல்போன் சேவை விரிவாக்கத்துக்குத் தேவையான கருவிகள் வாங்க விடப்பட்ட மெகா டெண்டரையே ரத்து செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை நாமும், அதிகாரிகள் சங்கங்களும் உடனடியாக டெண்டரை நிறைவேற்றி செல் சேவைகளை மேம்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறோம். உலகமெங்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது என்ற நிலை நிலவும்போது, பிட்ரோடா கமிட்டியோ பிஎஸ்என்எல் ஊழியர் ஓய்வு பெறும் வயதைக் குறைக்க வேண்டுமென்று வேறு பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது. “அரசுகள் வியாபாரம் செய்யக் கூடாது” என்ற நம்பிக்கை உள்ள திரு பிட்ரோடா போன்றவர்களால் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை நிலைநிறுத்தவோ வளர்ச்சி அடையச் செய்யவோ நிச்சயம் முடியாது. தீர்வுகள் உள்ளிருந்தே காணப்படவேண்டும், வெளியிலிருந்து அல்ல. திரு சாம் பிட்ரோடாவின் அறிக்கையின் அனைத்து அம்சங்களையும் எல்லா சங்கங்களுடனும் விரிவாக ஆலோசித்து அதை கழித்துக்கட்ட தேவையான அனைத்தையும் FNTO மேற்கொள்ளும்.


K.வள்ளிநாயகம்,
பொதுச் செயலர்

No comments:

Post a Comment