Tuesday, January 3, 2012

Cuddalore people- BSNL staff quarters are suffering for want of water.

கடலூர் :கடலூர் வண்ணாரப்பாளையம் டெலிபோன் ஊழியர்கள் குடியிருப்பில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உடைந்ததால் 4 நாட்களாக குடிநீரின்றி அவதியடைந்து வருகின்றனர். கடலூர் வண்ணாரப்பாளையத்தில் டெலிபோன் ஊழியர்கள் குடியிருப்பில் 100 வீடுகள் உள்ளன. 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் "தானே' புயலால் வளாகத்தில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தது. இதனால் குடியிருப்பில் வசிப்பவர்கள் குடிநீருக்கும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் டேங்கர் லாரிகளும் குடியிருப்புக்குள் வருவதில்லை. இதனால் குடிநீர் மற்றும் குளிப்பது உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு 4 நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் டெலிபோன் ஊழியர்கள் குடியிருப்பில் வசிப்போர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
Because of Thane cyclone in Cuddalore, water shortage is felt heavily for BSNL staff  living in Cuddalore Vannarpalayam quarters for past 4 days. This article is from Dinamalar, Tamil daily published on 03 01 2012

No comments:

Post a Comment