கடலூர், ஜன. 3:
புயலின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியிலும் பி.எஸ்.என்.எல். செல்ஃபோன் சேவை
திருப்திகரமாக இருந்தது என்று கடலூர் மாவட்ட மக்கள் பாராட்டு
தெரிவித்துள்ளனர்.டிசம்பர் 29-ம் தேதி இரவு புயல் தாக்குதல்
தொடங்கியதும் தனியார் செல்ஃபோன் நிறுவனங்கள் தங்கள் சேவையை அனைத்து வைத்து
விட்டன. மறுநாள் வெகு நேரத்திற்குப் பின்னரே சேவை தொடங்கியது. ஆனால்
பி.எஸ்.என்.எல். சேவை மட்டும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு இருந்தது
மக்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருந்தது. கடலூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். செல்ஃபோன் கோபுரங்கள் 402-ல், 247 டவர்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 3 நாள்களில் சுமார் 200 டவர்களை சீரமைத்து விட்டதா பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பி.எஸ்.என்.எல்.
செல்ஃபோன் டவர்களும், தொலைபேசி நிலையங்களும் செயலிழந்து விடாமல் இருக்க
கடந்த 4 நாள்களில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டீசலுக்காக செலவிட்ட
தொகை ரூ.30 லட்சத்தைத் தாண்டி விட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மின்
விநியோகம் சீரடைந்து விட்டால் பி.எஸ்.என்.எல். செல்ஃபோன் சேவை 100 சதவீதம்
சரியாகி விடும் என்றார். தரை வழி தொலைபேசிகள் சுமார் 6 ஆயிரம்
செயலிழந்துவிட்டன. இணைப்பு வயர்கள் அறுந்துவிட்டதே காரணம். இதற்காக சுமார்
200 கி.மீ. நீள வயர்கள் வர இருக்கின்றன என்றும் அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment