Thursday, June 7, 2012

Dharna at Thanjavur-Dinamalar 07 06 12

தஞ்சாவூர்: பி.எஸ்.என்.எல்., தொழிலாளர்களுக்கு போக்குவரத்து படி உள்ளிட்ட அனைத்து அலவன்ஸ்களையும் வழங்கக்கோரி தஞ்சை பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தஞ்சை பாலாஜி நகரிலுள்ள பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை பணியை புறக்கணித்து, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமர்ந்து, தர்ணா செய்தனர். இதில், போராட்டக்குழு தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார்.
போராட்டக்குழு கன்வீனர் பிரின்ஸ், பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில அமைப்பு செயலர் நடராஜா, சஞ்சார் நிகாம் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலர் பழனியப்பன், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலர் உதயன், தேசிய தொலைத்தொடர்புத்துறை ஊழியர் சம்மேளன துணைச்செயலாளர் நடராஜன், மாநில சங்க பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் அனைத்து மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு போக்குவரத்து படி உள்ளிட்ட அனைத்து அலவன்ஸ்களையும் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில், பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலர் மகேந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment